பழநி பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு திசா யாகம்
ADDED :446 days ago
பழநி; பழநி ஆனந்த விநாயகர் கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது
பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பத்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் வேண்டி மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம், திசாஹோமம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கன்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர முத்து அய்யர் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.