தேய்பிறை அஷ்டமி; சொர்ண ஆகர்ஷன கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :645 days ago
கோவை; பொன்னைய ராஜபுரம் கிருஷ்ணா காலனி செல்வ விநாயகர் கோவிலில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள சொர்ண ஆகர்ஷன கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.