உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாயாண்டி சித்தர் பீட குருபூஜை விழா; பக்தர்கள் பால்குடம்

மாயாண்டி சித்தர் பீட குருபூஜை விழா; பக்தர்கள் பால்குடம்

சிவகங்கை; இடையமேலுார் மாயாண்டி சித்தர் பீட குருபூஜை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்துநேர்த்தி செலுத்தினர். நேற்று முன்தினம் கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு பக்தர்கள் கிராம பொதுமக்கள் பால்குடம் எடுத்து மாயாண்டி சித்தரை வழிப்பட்டனர். திருவாசகம் வாசிப்பு, மகேஸ்வர பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு சுவாமி வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !