உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாலையூர் பழனியாண்டவர் கோவிலில் மலர் காவடி பெருவிழா

சாலையூர் பழனியாண்டவர் கோவிலில் மலர் காவடி பெருவிழா

அன்னுார்; சாலையூர் பழனியாண்டவர் கோவிலில் மலர் காவடி பெருவிழா நடந்தது. மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில், 28வது ஆண்டு மலர் காவடி பெருவிழா சாலையூர், பழனியாண்டவர் கோவிலில் நேற்று நடந்தது. குன்றின் அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவிலில் வழிபாடு நடந்தது. அங்கிருந்து நூற்றுக்கணக்கானோர், மலர் காவடி எடுத்து குன்றின் மீது உள்ள கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு காவடிகளை சமர்ப்பித்தனர். பழனியாண்டவருக்கு அபிஷேக பூஜை, மலர்களால் அலங்கார பூஜை நடந்தது. சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் பேசுகையில், ‘‘28 ஆண்டுகளாக, மாநில முருக பக்தர்கள் பேரவை சார்பில், மலர் காவடி திருவிழா ஆண்டுக்கு ஒரு ஊரில் நடத்தப்படுகிறது. தற்போது தமிழக அரசே முருக பக்தர்களின் மாநில மாநாட்டை நடத்துகிறது. இது வரவேற்கத்தக்கது,’’ என்றார். விழாவில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், அவிநாசி சின்னச்சாமி சித்தர் அருளுரை வழங்கினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !