காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :447 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி குணரஞ்சன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு, சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் காளஹஸ்தீஸ்வரரையும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தனர். அவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னிதி அருகில் பொன்னாடை போர்த்தி, கோயில் தீர்த்தப் பிரசாதங்களை கோவில் நிர்வாகம் வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான துணை செயல் அதிகாரி வித்யாசாகர் ரெட்டி, 12வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஸ்ரீனிவாஸ் நாயக், கோயில் ஆய்வாளர் ஹரிபாபு யாதவ், பிஆர்ஓ ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.