சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் அழகிரிநாதர் கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா
ADDED :4711 days ago
சேலம்: சொர்க்கவாசல் திறப்பு உற்சவத்தை முன்னிட்டு, சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், நேற்று முகூர்த்தகால் நடப்பட்டது. சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் டிசம்பர், 24ம் தேதி, சொர்க்க வாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடக்கிறது. சொர்க்கவாசல் திறப்பு விழா உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை, 6 மணிக்கு, கோட்டை பெருமாள் கோவிலில் முகூர்த்தகால் நடப்பட்டது. கோவில் பட்டாச்சார்யா சுதர்சனம், சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். நிகழ்ச்சியில், கோட்டை பெருமாள் கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.