விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்
ADDED :367 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம் செய்தார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 153 வது தேவாரத்தலமான விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில் வந்த தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு கோயில் நிா்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, அனைத்து சந்நிதிகளிலும் தருமபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் சிறப்பாக செய்திருந்தார்.