உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமழிசை ஜெகநாத பெருமாள் கோவிலில் வரும் 8ல் திருஅவதார மகோற்சவம் துவக்கம்

திருமழிசை ஜெகநாத பெருமாள் கோவிலில் வரும் 8ல் திருஅவதார மகோற்சவம் துவக்கம்

திருமழிசை; திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் கோவிலில், தையில் மகம் திருஅவதார மகோற்சவம், வரும் 8ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடக்கிறது.


திருவள்ளூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில், எழுந்தருளியுள்ள ‘பக்திஸாரர்’ எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, ‘தையில் மகம்’ திருஅவதார மகோற்சவம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான தையில் மகம் திருஅவதார மகோற்சவம், நேற்று, காலை 9:00 மணிக்கு பந்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. வரும் 6ம் தேதி, மாலை 6:00 மணி முதல், 7:00  மணிக்குள் ஆழ்வார் ஆஸ்தானம் விட்டு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின், தொடர்ந்து 12 நாட்கள், ஆழ்வாருக்கு தையில் மக திருஅவதார மகோற்சவ, விழாவில், காலை, மாலை சுவாமி பல்வேறு பல்லக்கில் எழுந்தருளி பக்தர்ளுக்கு அருள்பாலிப்பார். முக்கிய நிகழ்வான 8ம் தேதி சிம்ம வாகனத்துடன் விழா துவங்குகிறது. 12ம் தேதி கருடசேவை, 16ம் தேதி தேரோட்டம், 20ம் தேதி மாலை விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !