திருப்புத்தூர் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி
ADDED :284 days ago
திருப்புத்தூர்; திருப்புத்தூர் தர்மசாஸ்தா அய்யப்ப கோயிலில் நேற்று மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமி புறப்பாடு நடந்தது. இக்கோயிலிலிருந்து ஆண்டு தோறும் பக்தர்கள் மகரஜோதி தரிசன யாத்திரை செல்கின்றனர். அதை முன்னிட்டு மண்டலாபிஷேக விழா நடந்து வருகிறது. டிச.16ல் லட்சார்ச்சனை துவங்கி தினசரி காலையில் நடந்து வருகிறது. நேற்று மண்டலாபிஷேக பூர்த்தியை அடுத்து, காலை 9:00 மணிக்கு மூலவர் சன்னதி முன்பாக கலச பூஜைகள் துவங்கின. பின்னர் கலசத்திலிருந்த புனிதநீர் உள்ளிட்ட 21 திரவியங்களால் மூலவருக்கும், உற்ஸவருக்கும் மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரத்தில் மூலவர் அருள்பாலிக்க தீபாராதனை நடந்தது.