கூடலுாரில் இருந்து பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
ADDED :282 days ago
கூடலுார்; கூடலுாரில் இருந்து பழநிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரை துவக்கினர். கூடலுாரில் சுருளிமலை பழநிமலை பாதயாத்திரை குழுவினர் பழநிக்கு 34வது ஆண்டு பாதயாத்திரையை நேற்று தீர்த்தம் எடுத்து துவக்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் நடந்து சென்றனர். குருசாமி சிவராஜ் தலைமையில், பொறுப்பாளர் முத்துராயர் முன்னிலையில் துவங்கிய இந்த பாதயாத்திரையில் பஜனை பாடல்கள் பாடிக்கொண்டே நடந்து சென்றனர். கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம், தேனி, வத்தலக்குண்டு வழியாக பழநிக்கு ஜனவரி 2ல் சென்று தரிசனம் முடித்து ஊர் திரும்புவார்கள்.