ஆலய அதிசயங்கள்!
ADDED :4727 days ago
ஒரே மூலவரை நாராயணர், விநாயகர், சிவபெருமான், பார்வதி என வெவ்வேறு தெய்வங்களாக வழிபடும் பழக்கம் பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் உள்ளது. ரத்னவீதி உற்சவத்தில் நாராயணராகவும், ஸ்நானவேதி உற்சவத்தில் விநாயகராகவும், ஒன்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நவகுலேவரா உற்சவத்தில் சிவபெருமானாகவும், சயனத்திருவிழாவில் பார்வதி தேவியாகவும், ரதோற்சவத்தில் சூரியநாராயணராகவும் பாவித்து விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள்.