ஏழுகோடுகள் வடிவில் சப்தகன்னியர்!
ADDED :4728 days ago
தூத்துக்குடி கோவில்பட்டி முக்கூட்டுமலையில் கோயில் கொண்டுள்ள விநாயகர் கன்னி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக மூஞ்சுறு வாகனத்தில் அருள்பாலிக்கும் விநாயகர், இங்கே நந்தி வாகனத்தில் காட்சி தருவது விசேஷம்! இந்த விநாயகர் சன்னதிக்கு அருகே ஏழு கோடுகளைக் காண முடிகிறது. அந்தக் கோடுகளை சப்த கன்னியராக பாவித்து வழிபடுகிறார்கள்.