உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பச்சை பரத்தலை ஆண்டாள், ரெங்க மன்னார் பார்வையிடும் நிகழ்ச்சியுடன் பகல் பத்து உற்சவம் துவங்கியது.


பகல் பத்து உற்சவம் இன்று (டிச.,31) துவங்கி ஜனவரி 9 முடிய பகல் பத்து உற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை 4: 35 மணிக்கு வேதபிரான் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளி பச்சை பரத்தலை பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளல், அரையர் சேவை, திருவாராதனம், கோஷ்டி, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.


சொர்க்கவாசல் திறப்பு; மார்கழி மாத முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா 2025 ஜனவரி 10 காலை 7:05 மணிக்கு நடக்கிறது. அப்போது பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்க மன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து வரவேற்று, மாட வீதிகள் வழியாக ராப்பத்து மண்டபம் வந்தடைவர். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், பக்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் சேவை, சேவா காலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !