உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரதாம்பாள் கோவிலில் மார்கழி மகோற்சவ பக்தி இசை நிகழ்ச்சி

சாரதாம்பாள் கோவிலில் மார்கழி மகோற்சவ பக்தி இசை நிகழ்ச்சி

புதுச்சேரி; சாரதாம்பாள் கோவிலில் மார்கழி மகோற்சவத்தை முன்னிட்டு முத்துசாமி தீட்சிதர் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி, ராமானுஜர் பிரபக்தி இயக்கம், மார்கழி மகோற்சவ கமிட்டி மற்றும் சாரதா கலாமந்திர் இசை, நாட்டியப் பள்ளி சார்பில், 13ம் ஆண்டு மார்கழி மகோற்சவம் கடந்த 16ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. எல்லைப்பிள்ளைச் சாவடி, சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில் நடந்து வரும் நிகழ்ச்சியில், தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை விஷ்ணு சஹஸ்ரநாமம், லட்சுமி சஹஸ்ரநாமம், லிலிதா சஹஸ்ரநாமம் சேவித்தல் நடக்கிறது. உஷாராணி ஜெகதீசன் வழங்கும் தினம் ஒரு திருப்பாவை விளக்கவுரை நடந்து வருக்கிறது. இதையொட்டி, நேற்று மாலை முத்துசாமி தீட்சிதர் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வாக, வரும் 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி சிறப்பு நிகழ்ச்சி, 11ம் தேதி மாலை 5:30 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !