மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் தரிசனம்
ADDED :353 days ago
தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி, சுவாமி தரிசனம் செய்தார். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, நேற்று முன்தினம் கோவை வந்திருந்தார். இந்நிலையில், அவர் நேற்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமி தரிசனம் செய்தார். கோவில் பணியாளர்களிடம், கோவிலின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார்.