அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா; மாணிக்கவாசகர் மாட வீதி உலா
ADDED :289 days ago
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 2-ம் நாளான இன்று காலை விநாயகர், மாணிக்கவாசகர், சந்திரசேகரர் மாட வீதிஉலா வந்து அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும். தினமும் காலை, இரவு மாடவீதி உலா வந்து சுவாமி அருள்பாலிப்பார். 14ம் தேதி தாமரைக்குளத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடையும்.