உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பஞ்ச மூர்த்தி தரிசனம்; பக்தர்கள் பரவசம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பஞ்ச மூர்த்தி தரிசனம்; பக்தர்கள் பரவசம்

கன்னியாகுமரி; சுசீந்திரம் தாணுமாலய  சுவாமி கோவில் மார்கழி திருவிழாவையொட்டி பஞ்ச மூர்த்தி தரிசனம் நடந்தது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா ஜனவரி 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று பஞ்ச மூர்த்தி தரிசனம் நடந்தது. உலா வந்த பஞ்ச மூர்த்திகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த மார்கழி திருவிழா வரும் 13ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !