உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம்; அக்கார அடிசில் படைத்து வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம்; அக்கார அடிசில் படைத்து வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்சவம் இன்று சிறப்புடன் நடந்தது.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாசுரப்படி ஆண்டுதோறும் மார்கழி மாதம் 27 ஆம் நாளன்று ராமானுஜர் சார்பில் பெருமாளுக்கு அக்கார அடிசில் சமர்ப்பித்து ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் கூடாரவல்லி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதன்படி இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகளை பத்ரி பட்டர் செய்தார். அப்போது 100 வெள்ளி கிண்ணங்களில் அக்கார அடிசில் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் அறங்காவலர் மனோகரன், பாண்டிச்சேரி தொழிலதிபர் நவீன் பாலாஜி தனஜெயன், முத்துபட்டர், செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !