பழநியில் ஆபாச போஸ்டர் முகம் சுளிக்கும் பக்தர்கள்!
ADDED :4796 days ago
பழநி: பழநி பஸ் ஸ்டாண்ட் துவங்கி, மலைக்கோயில் அடிவாரம் வரை, ஏராளமான இடங்களில், ஆபாச சினிமா சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. புண்ணிய ஸ்தலமான பழநிக்கு சுவாமி தரிசனம் செய்ய, ஏராளமான பெண் பக்தர்களும் வருகின்றனர். இவர்கள் முகம் சுளிக்கும் வகையில் ஆங்கில, மலையாள ஆபாச படங்களின் போஸ்டர்கள் ஒட்ட பட்டுள்ளது. இதனால் பெண்கள் மட்டுமின்றி, மாலையணிந்து வரும் ஐயப்ப பக்தர்கள், மாணவிகள் முகம் சுளிக்கின்றனர். பழநி நகரில் முறையில்லாமல் ஒட்டப்படும் ஆபாச போஸ்டர்களுக்கு போலீசார் தடைவிதிக்க வேண்டும். எஸ்.பி., ஜெயச்சந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்கள் எதிர்பார்ப்பு.