உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் பாரி வேட்டை; தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு

ஸ்ரீரங்கத்தில் பாரி வேட்டை; தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு

ஸ்ரீரங்கம்: அரங்கநாத சுவாமி கோவிலில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார். தொடர்ந்து, மாட்டுப் பொங்கலை முன்னிட்டு இன்று காலை 8.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கனு மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன.  அதைத் தொடர்ந்து தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு பாரிவேட்டை நடத்திய படி தெற்கு வாசல் கடை வீதிகளில் உலா வந்தார். அதன் பின், மூலஸ் தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !