உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் கொந்தளிப்பு : பக்தர்கள் அச்சம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் கொந்தளிப்பு : பக்தர்கள் அச்சம்

ராமேஸ்வரம்; சூறாவளி காற்றினால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்ததால், பக்தர்கள் அச்சத்துடன் நீராடினர்.


வங்க கடலில் ஒரு மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் இன்று காலை முதல் ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது. இந்நிலையில் தொடர் விடுமுறையால் நேற்று தமிழகத்தின் பல பகுதியில் ஏராளமான பக்தர்கள், சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் முடித்து திரும்பிய பக்தர்களும் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராட சென்ற போது, அங்கு கடல் கொந்தளித்து ராட்சத அலைகள் எழுந்து கரையில் ஆக்ரோஷமாக மோதியது. இதனால் சேதமடைந்த படிக்கட்டு வழியாக நீராட சென்ற பக்தர்கள் பல இடறி விழுந்து காயமடைந்தனர். மேலும் வயது மூத்த பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் நீராடி சென்றனர். இந்த சூறாவளி காற்று கடல் கொந்தளிப்பு நாளை மறுநாள் வரை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !