காணும் பொங்கல் விழா; கோவில்களில் வழிபாடு ஏராளமானோர் தரிசனம்
ADDED :275 days ago
விருத்தாசலம்; காணும் பொங்கலையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தமிழர் பண்டிகையான பொங்கல் மூன்றாம் நாள், காணும் பொங்கலையொட்டி இன்று அதிகாலை முதல் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர், ஏகநாயகர் கோவில்களில் பக்தர்கள் புத்தாடை அணிந்து வந்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர், பெரியவர்களிடம் பெண்கள், குழந்தைகள் ஆசி பெற்றனர். இதேபோல், மோகாம்பரி அம்மன், சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி, கண்டியங்குப்பம் வெண்மலையப்பர், புதுக்கூரைப்பேட்டை அய்யனார் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.