காளஹஸ்தி சிவன் கோயிலில் அஞ்சி விநாயகருக்கு சிறப்பு பூஜை
ADDED :343 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் (வெள்ளிக்கிழமை) நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள அஞ்சி விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயிலின் தலைமை அர்ச்சகர் எஸ்.எம்.கே. ஸ்ரீனிவாஸ் குருக்கள் அஞ்சிஅஞ்சி கணபதி சன்னதியில்சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தார். தொடர்ந்து கணபதி பூஜை பல்வேறு பூஜைகளை அடுத்து பூர்ணாஹுதி நிகழ்ச்சிகள் சாஸ்திரப் பூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோயில் துணை செயல் அலுவலர் லோகேஷ் ரெட்டி, கோயில் ஆய்வாளர் ஹரி யாதவ், கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.