உத்தரகோசமங்கையில் பக்தர்கள் கூட்டம்; நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம்
உத்தரகோசமங்கை, ஜன. 19- உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ஆகும். இங்கு ராமாயண, புராண இதிகாசத்துடன் தொடர்புடைய விஷயங்கள் உள்ளடங்கியுள்ளது. சமீபத்தில் ஜன., 12 மற்றும் 13 தேதிகளில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகளவு வருகை தந்தது. இந்நிலையில் தொடர் விடுமுறையின் காரணமாக உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமியை தரிசனம் செய்வதற்கும் புதிய சந்தனம் காப்பிடப்பட்ட பச்சை மரகத நடராஜரின் பூட்டப்பட்ட சன்னதியில் இருந்து தரிசனம் செய்வதற்கும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து திரும்புகின்றனர்.
புற காவல் நிலையம் வேண்டும்: நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக உத்தரகோசமங்கை வருகை தரும் நிலையில் அப்பகுதியில் போலீசாரின் புறக்காவல் நிலையம் அவசியம் தேவையாக உள்ளது. இதனால் கோயிலுக்கு முன்பாக நிறுத்தக்கூடிய வாகனங்களை சீர் செய்வதற்கும் பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்துவதற்கும் பயனுள்ளதாக அமையும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.