உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் அதிசயம்; கோபுர கலசத்தில் 15 ஆண்டுகளாகியும் தன்மை மாறாமல் இருந்த வரகு!

திருச்செந்தூரில் அதிசயம்; கோபுர கலசத்தில் 15 ஆண்டுகளாகியும் தன்மை மாறாமல் இருந்த வரகு!

திருச்செந்தூர் ; திருச்செந்தூர் கோவில் ராஜகோபுர கலசங்களை புதுப்பிக்கும்போது, அதில் வைத்திருந்த வரகு, 15 ஆண்டுகளாகியும் தன்மை மாறாமல் இருந்த அதிசயம் நடந்துள்ளது.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  வரும் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கோபுர திருப்பணிகளுக்காக யாகசாலை பூஜை நடைபெற்று கோபுர பாலாலயம் இன்று நடைபெற்றது. அன்னதான மண்டபம், மற்றும் குடமுழுக்கு  உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகிறது. ரண்டு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த பணிகள் தற்போது 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. ஜூலை 7ம் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து கோவில் கோபுர திருப்பணிகளுக்கான கோபுர பாலாலயம் இன்று நடந்தது. கோவில் ராஜகோபுர கலசங்களை புதுப்பிக்கும்போது, அதில் வைத்திருந்த வரகு, 15 ஆண்டுகளாகியும் தன்மை மாறாமல் இருந்ததைக்கண்டு பக்தரகள் பரவசமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !