உடுமலை நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவு
ADDED :258 days ago
உடுமலை; உடுமலை நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி நிறைவு விழா நடந்தது. உடுமலை, பெரியகடை வீதி நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் பத்து, இராபத்து உற்சவம் தொடர்ந்து நடந்தது. சிறப்பு உற்சவம் டிச., 31ம் தேதி துவங்கி, இன்றுடன் நிறைவடைந்தது. நாள்தோறும் பூமீநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாள் சுவாமிகளுக்கு, மச்சாவதாரத்தில் துவங்கி நரசிம்மாவதாரம், பரசுராமாவதாரம் உட்பட சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. தினசரி ஆழ்வார் பாசுர சேவைகளும் நடந்தது. நிறைவு நாளான இன்று நம்மாழ்வார் மோட்சம் அலங்காரத்துடன் சுவாமிக்கு சிறப்பு சேவை நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.