உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞான யோகானந்த ஆசிரம மண்டப சாந்தி; 74ம் ஆண்டு குருபூஜை விழா

ஞான யோகானந்த ஆசிரம மண்டப சாந்தி; 74ம் ஆண்டு குருபூஜை விழா

பரமக்குடி; பரமக்குடி அரசு ஐ.டி.ஐ., எதிரில் உள்ள ஞான யோகானந்த ஆசிரமத்தில் மண்டப சாந்தி, திரிலிங்க சச்சிதானந்த சுவாமிகள் 74ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இங்கு அருள்பாலிக்கும் ராஜ கணபதிக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக காலை 5:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின்னர் புதிதாக கட்டப்பட்ட ஆசிரம மண்டபத்திற்கு சாந்தி வைபவம் நடந்து, கும்பநீர் தெளிக்கப்பட்டது. இங்கு முக்தி அடைந்த குரு மகான் சீதாராம சுவாமிகள் மற்றும் சிஷ்யர்கள் குரு சேஷ சுவாமிகள், சுந்தரராஜ சுவாமிகள் ஆகியோருக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !