அயோத்தி ஸ்ரீராமர் பிரதிஷ்டை தினம்; ஆலாந்துறையில் சிறப்பு வழிபாடு
ADDED :291 days ago
கோவை; அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் பிரதிஷ்டை தினத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கோவை ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ காலசம்ஹாரீஷ்வர் பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீராமருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. கிருஷ்ணமூர்த்தி அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.