சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் கம்பீரமாக பறந்தது தேசியக்கொடி
ADDED :273 days ago
சிதம்பரம்; குடியரசு தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது தீட்சிதர்கள் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. நாடு முழுதும் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் கிழக்கு ராஜகோபுரத்தில், பொது தீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக, கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் வெங்கடேச தீட்சிதர் தலைமையில், வெள்ளி தாம்பாளத்தில் தேசிய கொடியை வைத்து, சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கனகசபையில் இருந்து, மேளதாளங்களுடன், தேசியக்கொடி கோவில் வளாகத்தில், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, 152 அடி உயரம் உள்ள கிழக்கு ராஜகோபுரத்தில்ஏற்றப்பட்டது. பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.