லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ விழா நிறைவு
ADDED :356 days ago
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் நடந்த லட்சுமி நரசிங்க பெருமாள் பிரம்மோத்ஸவ விழா நிறைவடைந்தது. விழாவை ஒட்டி சேஷ வாகனம், திருமஞ்சனம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யாளி வாகனம், நாச்சியார் திருக்கோலம், சந்திர பிரபை வாகனம், கற்பக விருட்சக வாகனம், யானை வாகனம், திருத்தேர், குதிரை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு திருமஞ்சனம், தொடர்ந்து தீர்த்தவாரி, மாலை திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.