பூலோகநாதர் கோவிலில் சொர்ண பைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :374 days ago
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சொர்ண பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சொர்ண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சொர்ண பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பூஜைகளை குமார்,ஹரிபிரபோ குருக்கள் செய்தனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.