மந்தை பகவதி அம்மன் கோவிலுக்கு தீர்த்தம் அழைத்து வந்த பக்தர்கள்
ADDED :288 days ago
நத்தம்; நத்தம்-கொண்டையம்பட்டி மந்தை பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் வருகிற பிப்ரவரி 3-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக்குடங்கள் ஆண்டிமடத்து விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் செண்டை மேளதாளம், ஒயிலாட்டம், மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் தீர்த்தம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. இதில் கொண்டையம்பட்டி, கோவில்பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.