உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 51 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான 11 அடி உயர சிவலிங்கம் ரத ஊர்வலம்

51 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான 11 அடி உயர சிவலிங்கம் ரத ஊர்வலம்

காரியாபட்டி; காரியாபட்டியில் கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி சிவனடியார்கள் சார்பாக, ருத்ராட்ச சிவலிங்கம் உருவாக்கப்பட்டு, அருப்புக்கோட்டை காமராஜர் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. திருவண்ணாமலையிலிருந்து 450 கிலோ ருத்ராட்சம் வாங்கப்பட்டது. 51 ஆயிரம் ருத்ராட்சத்தில், 11 அடி உயர கொண்ட சிவலிங்கம் உருவாக்க 3 மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்றன. நேற்று மாலை முக்குரோடு மாரியம்மன் கோயிலில் இருந்து ரதம் புறப்பட்டு மாரியம்மன் கோயில் வரை சென்றது. கல்குறிச்சி, பாளையம்பட்டி வழியாக ரதம் புறப்பட்டது. ஏற்பாடுகளை சிவனடியார்கள் செய்திருந்தனர். ஸ்ரீவிஜயேந்திரர் -ஸ்ரீரவிசங்கர் சந்திப்பு திருவண்ணாமலையில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை, வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் சந்தித்து பேசினார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !