புதுச்சேரி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :323 days ago
புதுச்சேரி; முத்திரையர்பாளையம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். முத்திரையர்பாளையம், கோவிந்தன்பேட்டை மகாவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 31ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, 1ம் தேதி முதற்கால மற்றும் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடும், காலை 10:00 மணிக்கு புனித நீர் கொண்டு வந்து ஆஞ்சநேயர் விமான கலசத்தில் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.