வெள்ளி மஞ்சத்தில் அருள்பாலித்த திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர்
ADDED :267 days ago
திருச்சி; திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமாகும். சுமார் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவில் கோச்செங்கோட்சோழனால் கட்டப்பட்டது. மிகவும் பிரசித்திபெற்ற இக்கோவிலில் தைதெப்போற்சவம் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 7ம் நாள் இரவு உற்சவத்தில் சுவாமி மற்றும் அம்பாள் இருவரும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி தீபாராதனைக்கு பின்னர், மூன்றாம், நான்காம் பிரகாரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் சுவாமி அம்பாளை மனமுருகி தரிசனம் செய்தனர்.