இளையனார்வேலூர் பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்போற்சவம் விமரிசை
ADDED :212 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தை மாதத்தில் தெப்போற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டு, 13ம் ஆண்டு தெப்போற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. தெப்போற்சவத்தையொட்டி, மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு நாதஸ்வர இன்னிசையுடன், அதிர்வேட்டுகள் முழங்க, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி எழுந்தருளி குளத்தில், மூன்று முறை உலா வந்தார். இரண்டாம் நாளான நேற்று ஐந்து முறை தெப்பத்தில் உலா வந்தார். தெப்போற்சவத்தின் நிறைவு நாளான இன்று ஏழு முறை உலா வருகிறார். விழா ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் கதிரவன், அறங்காவலர் குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.