கோயில் திருவிழா
ADDED :4702 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடியில் முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் திருவிழா மூன்று நாள் நடந்தது. அம்மனுக்கு மலர் அலங்காரம், பாலபிஷேகம் தொடர்ந்து சேத்தாண்டி வேடமும், துகில் ஆபரண பெட்டி, அடசல் பானையுடன் சன்னதி வருதல், பூக்குழி இறங்குதல், பொங்கல் வைத்து கிடா பலியிடுதல், மஞ்சள் நீராட்டு நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.