100 ஆண்டு பழமையான கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4701 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே 100 ஆண்டு பழமையான கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆயக்கரன்புலத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு கலிதீர்த்த அய்யனார் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 2ம் தேதி முதல் 3 நாட்கள், சிறப்பு வேத பாராயணங்கள் மற்றும் திருமறை பாராயணங்கள் நடந்தன. இன்று காலை யாக சாலையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட புனித நீர், கோயில் கலசத்தில் ஊற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., காமராஜ் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இக்கோயிலில் பக்தர்கள் நேர்த்தி கடனாக குதிரை மற்றும் மனித பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது குறிப்பிடத்தக்கது.