விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம்
ADDED :322 days ago
விருதுநகர்; விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருக்கல்யாண திருவிழா பிப். 4 இரவு 7:05 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி, வள்ளி, தெய்வானை வீதியுலா நடந்தது. தைப்பூச தினமான நேற்று முன்தினம் பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை விநாயகர், வாலசுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை தேரில் ரத வீதி பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.