திருப்பதியில் பவுர்ணமி கருட சேவை கோலாகலம்
ADDED :348 days ago
திருப்பதி; திருமலையில் மகா பவுர்ணமி கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது. திருமலை ஸ்ரீவாரி கோயிலில் மகா பவுர்ணமி கருட சேவை நேற்று புதன்கிழமை மாலை கோலாகலமாக நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை, ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி, சகல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, கருடன் வாகனத்தில் திருமாட வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். நிகழ்ச்சியில் பெறிய ஜீயர்சுவாமி, சின்னஜியர்சுவாமி, திருமலை கூடுதல் இஓ வெங்கையா சவுத்ரி, துணை இஓ லோகநாதம் மற்றும் அதிகாரிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.