குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் விளக்கு பூஜை
                              ADDED :260 days ago 
                            
                          
                          
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோவிலில் தை மாத பெளர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.இதையொட்டி அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்குக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பால், பழம், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து கோவிலில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது.இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கபட்டது.