வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.29 லட்சம் வசூல்
ADDED :260 days ago
ஸ்ரீபெரும்பதுார்; ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் உண்டியல் திறந்து கணிக்கை எண்ணப்பட்டது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், கோவிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து நேற்று காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 29,36,841 ரூபாய் பணம், 70 கிராம் தங்கம், 1,900 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. கோவில் வரலாற்றில் முதல் முறையாக, அதிகளவிலான காணிக்கை பெறப்பட்டுள்ளதாக அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், கோவில் ஆய்வர் திலகவதி, கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.