அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பால்குடம், காவடி ஊர்வலம்
ADDED :261 days ago
பெ.நா.பாளையம்; சின்னதடாகம் அருகே தைப்பூச விழாவை ஒட்டி பால்குடம், காவடி ஊர்வலம் நடந்தது. சின்னதடாகம் அருகே உச்சயனூர் காவடி முருகன் கோவில் உள்ளது. இங்கு தைப்பூசத்தை ஒட்டி முருகனுக்கு மாலையிட்டோர், பால்குடம், காவடி எடுத்து, ஜமாப் குழுவினரின் இசையுடன் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். விழாவை ஒட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.