உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி முதல் வெள்ளி; விளமல் மதுரபாஷினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

மாசி முதல் வெள்ளி; விளமல் மதுரபாஷினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று மாசி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.


சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 153 வது தேவாரத்தலமான விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில், மாசி முதல் வெள்ளியை முன்னிட்டு, இன்று (14ம் தேதி) மதுரபாஷினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. மதுரபாஷினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !