திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆந்திர துணை முதல்வர்
ADDED :247 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வந்த ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாணுக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் வந்த அவரை பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்றனர். அவரிடம் ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு சொந்தமானது. சில நாட்களாக அந்த மலையை சிக்கந்தர் மலை என்றும், மலை மேல் ஆடு, கோழி பலி கொடுப்போம் என்றும் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த சிலர் சர்ச்சையை உண்டாக்கினர். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். தரிசனத்திற்கு பின், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின் அவர் மீனாட்சியை தரிசிப்பது நீண்டநாள் கனவு. அது நிறைவேறியுள்ளது, என்றார்.