கோட்டை முனீஸ்வரர் கோயிலில் மாசிக் களரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :262 days ago
கமுதி; கமுதி அருகே கோட்டைமேடு கிராமத்தில் தனி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள கோட்டை முனீஸ்வரர் கோயில் 48 வது மாசிக் களரி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கொடியேற்றுத்துடன் விழா துவங்கியது. முன்னதாக கோட்டை முனீஸ்வரர் சாமிக்கு பால், தயிர்,சந்தனம், மஞ்சள் உட்பட பூஜை பொருட்களால் அபிஷேகம் தீபாரதனை நடந்தது. கோயில் முன்பு முகூர்த்தகாலுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்யப்பட்டு, கம்பம் நடப்பட்டு கொடியேற்றம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். பிப்.26ல் பால்குடம், பொங்கல் வைத்தல், பிப்.27ல் பூச்சொரிதல், சிறப்பு அபிஷேகம், பிப்.28 ல் விளக்குபூஜை நடைபெறுகிறது. தினந்தோறும் கோட்டை முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். விழாவில் கமுதி, கோட்டைமேடு சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.