உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.19.49 கோடி திட்டப் பணிகள் துவக்கம்

அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.19.49 கோடி திட்டப் பணிகள் துவக்கம்

அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.19.49 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார்.


மலை அடிவாரம் முதல் ராக்காயி அம்மன் சன்னதி வரையுள்ள மலைப்பாதையில் ரூ. 9.10 கோடியில் தார் ரோடு, தடுப்புச் சுவர், மழைநீர் வடிகால், பாலம் அமைத்தல், பெரியாழ்வார் பூங்கா அருகே ரூ.1.50 கோடியில் அவரது திருவரசு (முக்தி அடைந்த இடம்) மண்டபத்தை மேம்படுத்தப்பட்டது. மேலும் மலைப்பாதையில் அமைந்துள்ள நாராயணவாவி தெப்பத்தை ரூ.53 லட்சத்தில் மராமத்து செய்தல், கிழக்கு தேரடி வீதி தென்கிழக்கில் அமைந்துள்ள அக்னி தீர்த்தக் குளத்தை ரூ.87 லட்சத்தில் மராமத்து செய்தல், கோட்டை வாசல் அருகிலுள்ள அம்பு போடும் மண்டபத்தை ரூ.56 லட்சத்தில் பழமை மாறாமல் புதுப்பித்தல், ரூ.2.95 கோடியில் மேற்கு கோட்டைச் சுவர் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மலைமீதுள்ள கருட தீர்த்தம் செல்லும் பக்தர்கள் நடைபாதையை ரூ.59 லட்சத்தில் புனரமைத்தல், தென்மேற்கு கோட்டைச் சுவரை ரூ.1.14 கோடியில் புனரமைத்தல் உள்ளிட்ட ரூ.3.98 கோடி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !