உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடக்கத்தி அம்மன் கோவிலில் தெருக்கட்டு பொங்கல் விழா

வடக்கத்தி அம்மன் கோவிலில் தெருக்கட்டு பொங்கல் விழா

சிவகாசி; சிவகாசி ஜெ. நகரில் கற்பக விநாயகர் வடக்கத்தி அம்மன் கோயில் 11 வது ஆண்டு தெருக்கட்டு பொங்கல் விழா நடந்தது. மாலை கோயில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜை நடந்தது தொடர்ந்து செல்வ விநாயகர், கற்பக விநாயகர் வடக்கத்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பொங்கலிட்டு படையல் பூஜை, சந்தன காப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. சிறுவர்கள் பெண்களுக்கு கோளம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை ஜெ. நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் செய்தனர்.







தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !