சின்னாளபட்டி சந்து மாரியம்மன் கோயிலில் பூப்பல்லக்கு ஊர்வலம்
ADDED :590 days ago
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில், ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பிருந்தாவன தோப்பில் இருந்து முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில், கரகம் பாலித்தல் நடந்தது. பூசாரி அமாவாசை வாயில் அலகு குத்திய நிலையில், அம்மன் பூப்பல்லக்கில் ஊர்வலமாக எழுந்தருளல் நடந்தது ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.