சக்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :259 days ago
கோவை; சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் மாசி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள பாலமுருகனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் தங்க காப்பு கவசத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.